முதன்முறையாக, நடிகை ஸ்வேதா மேனன் வரலாற்றுச் சாதனை..

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக திகழும் ஸ்வேதா மேனன், தமிழ் சினிமால் அரவாண், நான் அவனில்லை 2, சிநிகிதியே, துணை முதல்வர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்திருக்கிறார்.
இதனிடையில் நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. ஆபாச படங்களில் நடித்ததாகவும், விளம்பரங்களில் நிர்வாண போஸ் கொடுத்ததாகவும் புகார்கள் எழுந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர் நடித்த ரதி நிர்வேதம், பாலேரி மாணிக்கம் உள்ளிட்ட படங்களிலும், காமசூத்ரா விளம்பரத்திலும் ஆபாச காட்சிகளில் நடித்ததாக ஸ்வேதா மேனனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஸ்வேதா மேனன். மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நிலையில், தன்மீது உள்நோக்கத்துடன் புகார் அளிக்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து ஸ்வேதா மேனனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவுக்கு என்று தென்னிந்திய நடிகர்கள் சங்கம் உள்ளதை போல, கேரளாவில் அம்மா அமைப்பு உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் மோகன்லால் இருந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக அவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அம்மா அமைப்புக்கான தேர்தல் நடந்துள்ளது.
இதற்கான ஓட்டெடுப்பு நடந்து வந்த நிலையில், ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடிகை ஸ்வேதா மேனன் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவராக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். அம்மா அமைப்பில் இதுவரை பெண் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது கிடையாது. இந்நிலையில் கடுமையான எதிர்ப்புகள், சர்ச்சைகளை எல்லாம் கடந்து ஸ்வேதா மேனன் ‘அம்மா’ சங்கத்தின் பெண் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து அவருக்கு திரையுலகை சார்ந்த பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வரலாற்று வெற்றி குறித்து நடிகை அன்சிபா பேசும்போது, சங்கத்தின் பெயரே அம்மா என்ற நிலையில், அசோசியேனுக்கு பெண் தலைவர் வேண்டும் என நினைத்தோம். அது தற்போது நடந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அன்சிபா இணைச் செயலாளர் பதவிக்கு தேர்வாகியுள்ளார்.
தற்போது அம்மா அமைப்பு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள் ஸ்வேதா மேனன். திரையுலக சார்ந்த பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
