‘ஜனநாயகன்’ பட நிகழ்வுகள் பற்றி, பாபி தியோல் பகிர்வு, வைரல்..

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கி வரும், அரசியல் எழுச்சியாய் முழக்கமிடும் படம் ‘ஜனநாயகன்’. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது.
விஜய்யின் கடைசிப்படமாகவும் இருப்பதால், விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் ஜனநாயகனை கொண்டாடுவார்கள். தற்போது ‘ஜனநாயகன்’ படம் குறித்து இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள பாபி தியோல், விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.
‘விஜய் மிகப்பெரிய நட்சத்திரம். அவர் படத்தில் நடிக்கிறேன் என சொன்னவுடன் பலரும் அப்படத்தின் படப்பிடிப்பு எங்கு நடக்கின்றது என்று தான் கேட்டார்கள். ஏனென்றால், விஜய் ஒரு இடத்திற்கு சென்றாலே அவரை பார்க்க ஏராளமானோர் திரண்டு விடுகின்றனர். அதனால், படப்பிடிப்பை நினைத்தவாறு நடத்தமுடியாமல் போகும்.
எனவேதான் லைவ் லொகேஷனை விட ஸ்டுடியோவில் விஜய் படத்தின் படப்பிடிப்பு நடந்தால் நல்லது என என்னிடம் பலர் சொல்லியிருக்கின்றனர். அந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் விஜய் கொண்டாடப்பட்டு வருகின்றார்’ என வியந்து பேசியிருக்கிறார்.
ஏற்கனவே, ஒரு மேடையில் விஜய் பற்றியும் அவருடன் ஜனநாயகன் படத்தில் இணைந்து நடிப்பதை பற்றியும் பாபிதியோல் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஜனநாயகன் குறித்து பேசியிருப்பது விஜய் ரசிகர்களால் செம வைரலாகி வருகின்றது.
