ரேணுகாவை பற்றி தெரிந்து கொண்ட நந்தினி, நடக்கப் போவது என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 25-07-25
நேற்றைய எபிசோடில் நீ 400 வாட்டி கூப்பிட்டு இருந்தாலும் அவருக்கு கேட்டு இருக்காது. அவர் எவ்வளவு பெரிய மனுஷன் தெரியுமா? எத்தனை வருடமா அவர் இந்த கம்பெனியில் வேலை பார்க்கிறார் தெரியுமா நீ அசிங்கப்படுத்தியது அவர இல்ல எல்லா ஸ்டாப், இங்கே இருக்கிறவங்க எல்லாருமே உங்களோட குடும்பத்தில் ஒருத்தர் என்று சொல்ல இதை பார்த்துட்டு எங்க எம்பிளாய் அமைதியா இருப்பாங்கன்னு பார்த்தியா என்று சொல்ல ஆமாம் அமைதியா இருக்க மாட்டோம் என சொல்லுகின்றன. சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என அர்ச்சனாவிடம் சொல்ல அர்ச்சனா முடியாது என்று சொல்ல அனைவரும் மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் என கோஷமிடுகின்றனர். அர்ச்சனா கோபமாக ரூமுக்குள் போக வெளியில் சாத்திவிட்டு மீண்டும் போராடுவோம் என சொல்லிக் கொண்டிருக்க மேனேஜர் சுந்தரவல்லிக்கு போன் போடுகிறார்.
நடந்த விஷயங்களை சுந்தரவளியிடம் சொல்ல இதெல்லாம் என்ன புதுப்பழக்கம் போராட்டம் பண்றது என்று கோபப்பட சூர்யா சார் தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல சரி நான் நேர்ல வர வைங்கன்னு சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா கம்பெனியில் வேலை செய்பவர்களுடன் சேர்ந்து மன்னிப்பு கேட்கும் வரை போராடுவோம் என கோஷமிட்டு கொண்டு இருக்க சுந்தரவள்ளி வந்து நிற்கிறார். இதெல்லாம் என்ன பழக்கம் எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்ல வேண்டியது தானே என கோபப்படுகிறார். நீங்க எல்லாம் இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல என்று சொல்ல, ஏன்னா அவங்கபட்ட அவமானம் அப்படி மாற்றுத்திறனாளியை அடிச்சா யாராவது சும்மா இருப்பாங்களா இவங்க வெறும் போராட்டம் மட்டும்தான் பண்றாங்க அது நானா இருந்தா அரை விற்றுப்பேன் என்று சொல்லுகிறார். இது நீ தூண்டிவிட்டு தான் நடக்குதா என்று சொல்ல ஏன் அவங்களுக்கு சூடு சொரணை இல்லையா என்று சூர்யா கேட்கிறார்.
உடனே சுந்தரவல்லி நந்தினியை பார்த்து இவளும் இங்கதான் இருக்காளா எல்லாரும் சேர்ந்து கூட்டுக் களவாணிகளா இங்கதான் இருக்கீங்களா என்று கேட்கிறார். இவ ஏத்திவிட்டு தானே இப்படி நடக்குது என்று கேட்கிறார். உங்க கற்பனை சூப்பரா இருக்கு முதல்ல வந்த பிரச்சனையை தீர்க்க பாருங்க என்று சொல்ல இப்ப என்ன பண்ண சொல்ல போறீங்க என்று கேட்க, அதுதான் தெளிவா சொல்றாங்களே உங்களுடைய சைனிங் அத்தாரிட்டி வந்து இவங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று சொல்ல சுந்தரவல்லி எதுவும் பேசாமல் அமைதியாக கம்பெனிக்குள் வந்து அர்ச்சனா இருக்கும் கதவை திறக்க அழுது கொண்டே வந்த அர்ச்சனா என்னை யாரும் மதிக்க மாட்டேங்கிறாங்க. எனக்கு எவ்வளவு அவமானமா இருக்கு தெரியுமா? என்று சொல்ல நீ எதுக்கு இதுக்காக பீல் பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்லுகிறார்.
உன்ன எதுக்காக இங்க வர வெச்சேன், நீ பொறுப்பான ஆளுன்னு தானே ஆனா நீ இங்க அழுதுகிட்டு இருக்க கம்பெனி என்றால் இப்படித்தான் இருக்கத்தான் செய்யும் அதை மேனேஜ் பண்ணி தான் ஆகணும் என்று சொல்ல, அந்தத் பியூன் கூப்பிட்டு திரும்பல அதுக்காக தான் அடிச்சேன், அப்புறம் அந்த ஆளுக்கு காது கேட்காதுன்னு சொல்றாங்க அப்புறம் காது கேட்காது ஆளை எதுக்கு வேலைக்கு வச்சீங்க இது என்னோட தப்பா என்று கேட்க ஆமா தப்புதான் என சுந்தரவல்லி சொல்லுகிறார். அவங்களுக்கு நம்ம மேல இருக்கிற நம்பிக்கை போகக்கூடாது என்று சொல்லிவிட்டு அர்ச்சனாவை அழைத்து வருகிறார். சுந்தரவல்லி வேலை செய்பவர்களிடம் நான் எல்லாத்தையும் விசாரிச்சுட்டேன் காது கேக்காத விஷயம் அவங்களுக்கு தெரியாது என்று சொல்ல அப்ப அடிச்சது தப்பு இல்லையா என்று கேட்க சென்சிபுல்லா பேசு என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். அவ யாரு முதல்ல தொழிலாளி மேல கை வைக்கிறதுக்கு என்று சூர்யா கோபப்படுகிறார். நான் உன்கிட்ட பேச வரலை என்று சொல்லிவிட்டு தொழிலாளிகளுடன் பேச ஆரம்பிக்கிறார்.
இந்தப் பிரச்சனையை இதோட விட்டுடுங்க பெரிசாக்க வேண்டாம். அவ அடிச்சது தப்புதான் இதுக்கு மேல இது மாதிரி நடக்காது நான் பாத்துக்குறேன் என்று சொல்ல, அவ என்னோட கெஸ்ட் அவளை என்னால மன்னிப்பு கேட்க வைக்க முடியாது அது எனக்கு தான் அசிங்கம் அவளுக்காக நான் வேணா மன்னிப்பு கேட்டுக்குறேன் மன்னிச்சிடுங்க என்று சொல்ல சூர்யா அவ தான் மன்னிப்பு கேட்கணும் என சொல்லுகிறார். சுந்தரவல்லி அர்ச்சனாவிடம் வேற வழி இல்ல மன்னிப்பு கேட்டு விடு என்று சொல்ல அர்ச்சனா தயங்க கேளு அர்ச்சனா என்று மீண்டும் சுந்தரவல்லி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் ரேணுகா பால் காச்சி இருக்க குடுக்குறீங்களா அக்கா என்று கேட்க வேண்டாம் என சொல்லுகிறார் நந்தினி. அப்போ இவ அர்ச்சனமா அனுப்புற ஆளுதானா அப்ப அவங்களும் கெட்டவங்களா இந்த குடும்பத்தை எதுக்கு பழி வாங்கணும் என்று யோசிக்கிறார். அக்கா அக்கான்னு நேர்ல இப்படி பேசிட்டு அர்ச்சனா அம்மாகிட்ட மாத்தி பேசுறாளே என்று நினைக்கிறார். உடனே ரேணுகா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் திட்ட மாட்டிங்களே என்று சொல்லுகிறார்.
கேளு என்று சொல்ல அந்த அர்ச்சனா யாருக்கா அவங்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு அவங்களுக்கு எதுக்கு சைனிங் அத்தாரிட்டி கொடுக்கணும் என்று அர்ச்சனாவை திட்டுவது போல பேசுகிறார். ஞாயமா பார்த்தா சூர்யா சார் ஓட பொண்டாட்டி நீங்க உட்கார வேண்டிய இடம் விட்டுக் கொடுக்காதீங்க உங்க குணத்துல கால் தூசி கூட அந்த அர்ச்சனா இல்ல என்று சொல்ல நந்தினி அமைதியாக கேட்கிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 25-07-25