கவின் நடிப்பில் கிஸ், மாஸ், படங்களை தொடர்ந்து அடுத்த படப்பூஜை..

கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது.
மேலும், வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து கவினின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளன.
‘தண்டட்டி’ படத்தை இயக்கிய ராம் சங்கையா இயக்கவுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘தண்டட்டி’ படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 18-வது படம் இதுவாகும். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் கவின் உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
