சூர்யா, விஷ்ணு விஷால், பிரதீப் என மமிதா பைஜு செம பிஸி..

மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் மமிதா பைஜு. தற்போது, மலையாளத்தைக் காட்டிலும் தமிழ் சினிமாவில் தான் இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.
மமிதா பைஜு நடிப்பில் தற்போது தமிழில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் டி.ஜே. அருணாச்சலத்துக்கு ஜோடியாக மமிதா நடித்துள்ளதாகவும், விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாவும் கூறப்படுகிறது.
அடுத்ததாக ‘சூர்யா-46’. இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் மமிதா.
இதுதவிர ‘இரண்டு வானம்’ என்கிற தமிழ்ப் படத்திலும் நடித்து முடித்துள்ளார் மமிதா. இப்படத்தை ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மமிதா பைஜு. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். இவர் தமிழில் அசோக் செல்வன் நடித்த ‘போர்த்தொழில்’ படத்தின் இயக்குனர் ஆவார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
மேலும், பிரதீப் ரங்கநாதன் உடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் மமிதா. இப்படத்தின் பெயர் டியூடு. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு டியூடு திரைப்படம் ரிலீஸாக உள்ளது.
