விஜய்யின் அரசியல் வருகை குறித்து, தயாரிப்பாளர் விமர்சனம்; வைரல்

Web Ads

தளபதி விஜய் அரசியல் பேசும் கடைசிப் படமாக, ஹெச் வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதன் பின்னர் முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளார். இதற்கான திட்டங்களும் நடைபெற்று வருகிறது.

விஜய்யின் தவெக கட்சியை வரவேற்பவர்கள் உண்டு. கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. இதனை விஜய்யும் நன்றாக அறிந்துதான் செயலில் இறங்கியுள்ளார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து தயாரிப்பாளர் ராஜன் பேசியுள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில்,

‘நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தவுடனேயே முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். இவர்கள் எல்லாம் என்ன எம்ஜிஆரா?. எம்ஜிஆர் செய்ததில் 25 சதவீதமாவது நல்லது செய்தால் மட்டுமே எம்ஜிஆராக மாற முடியும். அவர் எத்தனை பேருக்கு தெரியுமா உதவி செய்திருக்கிறார். அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

எம்ஜிஆராக நினைத்து அரசியலுக்கு வரக்கூடாது. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அது அவரது உரிமை. ஆனால், இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பதாக கூறியிருக்கிறார்.

அவர் வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் அவரை கண்டிப்பாக மறந்துவிடுவார்கள்’ என்றார்.இவரது பேச்சுக்கு பதிலுரையும் விஜய் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொடுக்கப்பட்டு வருகிறது.

actor vijay politics and producer rajan speech