பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த அதர்வா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

பராசக்தி படம் குறித்து அதர்வா லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சுதா கொங்காரா இயக்கி வரும் இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார்.
அதாவது இன்னும் இரண்டு மாதங்களில் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
