ஊருக்கு கிளம்பிய பிரபு, ஆதிரை. சூர்யாவிட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு, மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் துப்பாக்கி சூட்றியா என்று கேட்க அதெல்லாம் எனக்கு தெரியாது வேண்டாம் என சொல்ல, சூர்யா பலூன் சுடும் கடைக்கு அழைத்துச் சென்று நந்தினிக்கு செல்லி கொடுக்க ஆதிரை கவனித்து விட்டு எனக்கும் அது மாதிரி பண்ணனும் என்று கேட்கிறார். பிரபு வேண்டாமென்று சொல்ல ஆதிரை வலுக்கட்டாயமாக வேண்டும் என்று சொல்ல அவர்களும் வருகின்றனர். பிரபு ஆதிரை பலூன் சுடுவதற்கு திருடன் பர்சை எடுத்துக்கொண்டு ஓடிவிட இவர்கள் இருவரும் துரத்த நந்தினியும் வருகிறார். திருடன் மரத்துக்கு பின்னால் ஒளிந்து பர்ஸ்ஸை எடுத்துப் பார்க்க அதில் வெறும் பேப்பராக இருக்கிறது. முதலில் பத்து மற்றும் இருபது ரூபாய் எடுக்க பிறகு ஒரு நூறு ரூபாய் இருக்கிறது உடனே திருடன் சந்தோஷப்பட அந்த நோட்டு கிழிந்து இருப்பதை பார்த்து இவன மாதிரி ஒரு கஞ்சப்பயல நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை என்று சொல்லுகிறார்.
மீண்டும் நால்வரும் சந்திக்க ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்கின்றனர். பர்ஸ்ல எவ்வளவு இருந்தது என்று கேட்க 30 ரூபா தான் வச்சிருந்தேன் மீதி எல்லாம் பேண்ட் பாக்கெட்ல தான் வச்சிருந்தேன் என்று சொல்ல அப்ப எதுக்கு அப்படி ஓடுனீங்க என்று கேட்க அதுல ஒரு பொக்கிஷம் இருக்கு என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் திருடன் பர்ஸை தூக்கி போட அது இவர்கள் பக்கத்தில் வந்த விழ சூர்யா அதுல ஒன்னும் இல்லாம அவனே தூக்கி போட்டுட்டான் என்று கிண்டல் அடிக்கிறார். ஏதோ முக்கியமான பொக்கிஷம் இருக்குன்னு சொன்னீங்களே அது இருக்கா என்று பாருங்கள் என்று ஆதிரை சொல்ல, அதில் போட்டோவை எடுத்து ஆதிரையிடம் காண்பிக்க சந்தோஷப்படுகிறார். குடும்பத்தினர் பொதுமக்கள் என அனைவரும் டான்ஸ் நிகழ்ச்சியை காண உட்கார்ந்து இருக்கின்றனர். உடனே டான்ஸ் போட்டி தொடங்கி இரண்டு ஜோடிகள் ஆடிய பிறகு பிரபு ஆதிரை என்று கூப்பிடுகின்றனர்.
ஆதிரையும் பிரபுவும் சூப்பராக டான்ஸ் ஆடி முடிக்கின்றனர். அடுத்ததாக சூர்யா நந்தினி கூப்பிட, அவர்களும் டான்ஸ் ஆடி முடிக்கின்றனர். இறுதிப்போட்டிக்கு இரண்டு ஜோடிகள் தகுதி பெற்றதாக முதல் ஜோடி சூர்யா நந்தினி மற்றும் இரண்டாவது ஜோடி ஆதிரை பிரபு என சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றன. ஆதிரை வேல்விழி அம்மாவிடம் நீங்க எதுக்கும் பயப்படாதீங்க நான் அவரை எப்படியாவது சமபந்தி விருந்துக்கு கூட்டிட்டு வந்துருவேன் நீங்க அவர மட்டும் கூட்டிட்டு வந்துருங்க என்று சொல்ல, அதுதான் எப்படின்னு தெரியல என்று சொல்ல வந்ததுல இருந்து சூர்யா அண்ணா கூட தான் அவரு செட்டா இருக்காரு அவர்கிட்ட சொன்னா நடக்கும் என்று ஆதிரை உள்ளே வருகிறார். சூர்யா பிரபுவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க ஆதிரை சூர்யாவிடம் பேச வருகிறார்.
என் புருஷனும் அவரோட சித்தப்பாவும் ஜென்ம விரோதியா பாத்துக்குறாங்க அவங்கள திருவிழாவில் நடக்கிற சமபந்தி விருந்துல கலந்துக்க வைக்கணும் அது நடக்காதுன்னு தோணுது என்று பேசிக் கொண்டிருக்க இதனை வேல்விழி மறைந்திருந்து கேட்டு விடுகிறார். நான் அவரை எப்படியாவது பேசிடுவேன் ஆனால் பிரபுவோட சித்தப்பா உங்க வார்த்தைக்கு கட்டப்படுவாரு எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்று சொல்ல, எங்க சின்ன மாமனார் எப்படியாவது சமபந்தி விருந்துல கலந்துக்க வச்சுட்டீங்கனா போதும் என்று சொல்ல, சூர்யா அவரை சமபந்தில வக்காரவெச்சு சாப்பிட வைக்க வேண்டியது என் பொறுப்பு என்று சொல்ல ஆதிரை சந்தோஷப்படுகிறார். ஆனால் வேல்விழி இதை நான் சும்மா விடமாட்டேன் இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் என்று உறுதியாக முடிவெடுத்து இப்பவே டாடி கிட்ட சொல்லி ஆகணும் என்று கிளம்புகிறார்.
பாட்டி சாப்பாடு எடுத்துக்கொண்டு வர, யாருக்கு என்று பிரபு கேட்க, ஆதிரை இன்னும் சாப்பிடலையா என்று கேட்டுவிட்டு நானே சாப்பாடு கொடுக்கிறேன் என சொல்லி ஆதிரையை கூட்டி வந்து ஊட்டி விடுகிறார். வேல்விழியும் அவரது சகோதரரும் சேர்ந்து ஏகாம்பரத்திடம் சமபந்தி விஷயத்தை சொல்ல ஏகாம்பரம் கோபப்பட்டு நடு வீட்டில் வந்து கத்த குடும்பத்தினர் அனைவரும் வந்து விடுகின்றனர். எங்கள சாகடிக்க இங்க கூட்டிட்டு வந்தியா என்று கேட்க என்ன சொல்றீங்க என்று கேட்க, சமபந்தி விருந்துல கலந்துக்க தானே என்ன கூட்டிட்டு வந்த அதுக்கு நான் சாவதே மேல் என்று சொல்லுகிறார். அதுக்கு தானே கூட்டிட்டு வந்த உன் தாலி மேலே சத்தியம் பண்ணு என்று சொல்ல மேகலை உண்மையை ஒத்துக் கொள்கிறார். பேக் எடுத்துட்டு வாங்க கிளம்பலாம் என்று வேல்விழியிடம் சொல்ல ஆதிரை நந்தினி இருவரும் சூர்யாவிடம் வந்து விஷயத்தை சொல்லுகின்றனர். நான் உங்களை தான் நம்பியிருக்கேன்.இந்த திருவிழாவில் பிரிஞ்சி இருக்கிற இந்த குடும்பம் ஒன்னாகணும். அவரை எப்படியாவது தடுத்து நிறுத்தி இந்த விருந்துல கலந்துக்க வைக்கணும் என்று சொல்லி அழைத்து வர ஏகாம்பரம் மேகலையை இழுத்து வந்து காரில் ஏற்றிக்கொண்டு சென்று விடுகிறார்.
சூர்யா அவர்களை கூப்பிட்டுக் கொண்டே காருக்கு பின்னால் ஓடி கூப்பிட்டோம் காரை நிறுத்தாததால் வேறு வழியில் வந்து காரை நிறுத்தி ஏகாம்பரத்திடம் திருவிழா முடிஞ்ச உடனே போகலாம் என்று சமாதானப்படுத்தி கூப்பிட, இதையெல்லாம் பிரபு கவனித்துக் கொண்டிருக்க, ஏகாம்பரம் இவளும் ஆதிரையும் சேர்ந்து சமபந்தி விருந்துல கலந்துக்க எங்களுக்கு தெரியாம வர சொல்லி இருக்காங்க எங்களுக்கு புடிக்கல அதனால தான் நான் கிளம்புறேன் என்று சொல்ல, நீங்க வேணா அவங்க பக்கத்துல ஒக்காந்து சாப்பிடாதீங்க என்கூட சாப்பிடுங்க என்று சொல்ல அதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லுகிறார் உடனே சூர்யா. நான் எப்படியும் அந்த பிரபுவை டான்ஸ் போட்டியில் தோக்க வச்சிடுவேன் அவன் பொட்டி படுக்க எடுத்துட்டு போயிடுவான் என்று சொல்ல பிரபு கோபப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் பிரபு ஊருக்கு கிளம்ப சூர்யா பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார். போட்டியில் கலந்து கிட்டு தோத்தாலும் இல்ல தோற்றுவிடுவோம் என்று பயந்து போனாலும் ஒண்ணுதான் என்று சொல்லுகிறார் உடனே பிரபு நான் போகமாட்டேன் என்ற முடிவெடுக்கிறார்.
நந்தினி ஆதிரையிடம் கண்டிப்பாக உங்க ரெண்டு குடும்பமும் சமபந்தி விருந்தினர் கலந்துகிட்டு சாப்பிடுவாங்க என்று சொல்லுகிறார். பிரபு ஆதிரை இடம் என்ன வெறுப்பு ஏத்திய அவன போட்டியில் ஜெயித்து கண்டிப்பாக அழ வைக்கணும் என்று சொல்ல அது நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நடக்காது என்று சூர்யா சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
