‘தக் லைஃப்’ விமர்சனங்களால், கமல் செய்யும் கரெக்‌ஷன்ஸ்

Web Ads

கமல்ஹாசனின் அடுத்த திரைப்பட தகவல்கள் பற்றிப் பார்ப்போம்..

மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் மாபெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஜூன் 5-ந்தேதி ரிலீஸான ‘தக் லைஃப்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், ‘தக்லைஃப்’ படத்தின் எதிர்மறை விமர்சனங்களால் கமல் உஷாராகி இருக்கின்றார்.

‘தக் லைஃப்’ படத்தில் மிக முக்கியமான சொல்லப்பட்ட விஷயம், ‘எமோஷனல் கனெக்ட் ஆகவில்லை என்பது. மேலும், கேங்ஸ்டர் படம் என்றாலும் படத்தில் எந்த வித இன்டன்சனா காட்சிகளும் இல்லை.

இதனால், உஷாரான கமல் KH237 படத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்திருப்பதாகவும், குறிப்பாக எமோஷன்ஸை அதிகப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அன்பறிவு இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு கதை மற்றும் வசனம் கமல் எழுதியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகவுள்ளது.

இணையவெளியில், இப்படம் ‘குருதிப்புனல்’ பாணியில் வேறொரு கோணத்தில் உருவாகும் படமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. KH237 திரைப்படத்தை ஒரு வெற்றிப்படமாக கொடுக்கும் முனைப்பில் இருக்கின்றார் கமல். முதல் முறையாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இப்படத்தின் மூலம் இயக்குனர்களாக களமிறங்குகின்றனர்.

விக்ரம், தக்லைப் போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவு பணியாற்றினார்கள். அதில், இம்ப்ரஸான கமல், அவர்களை இயக்குனர்களாக அறிமுகம் செய்து வைக்கின்றார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கப்படும் இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது.

kamalhaasan made some changes in kh237 script