அர்ச்சனா கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதிலடி, நந்தினியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுரேகா நல்லவேளை பாட்டிலில் கையை உடைத்துக்கொண்டான் மேல இருந்து குதிச்சா என்ன ஆயிருக்கும் என்று சொல்ல அப்படி எல்லாம் பேசாதீங்க அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்லுகிறார். உடனே மாதவி நந்தினி திட்ட அருணாச்சலம் எப்ப பார்த்தாலும் சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்காதீங்க என்று சொல்லுகிறார். இவை என்னைக்கு என் வீட்டுக்கு வந்தாலும் அன்னைக்கே பிரச்சனை ஸ்டார்ட் ஆயிடுச்சு இன்னைக்கு இவ குத்துக்கல் மாதிரி இருக்கா என் புள்ள தான் உள்ள படுத்திருக்கான் என்று கோபப்பட நந்தினி சூர்யா சாருக்கு எதுவும் ஆகக்கூடாது உன்கிட்ட உத்தரவு கேட்டுட்டு தானே கிளம்பின அப்புறமும் ஏன் இப்படி நடக்குது எதுவும் ஆகக்கூடாது என்று மனதில் நினைக்கிறார்.
டாக்டர் சூர்யாவை செக் பண்ணிவிட்டு வெளியில் வந்து பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல ஆனா மூணு மாசத்துக்கு கையை ரொம்ப அசைக்க கூடாது கிட்ட இருந்து யாராவது பாத்துக்கணும் போய் இப்போ பேஷண்ட பார்க்கலாம் என்று சொல்ல சுந்தரவல்லி தவிர மற்றவர்கள் வந்து சூர்யாவை பார்க்க நந்தினியும் வெளியில் நிற்கிறார். சூர்யா மயக்கத்தில் இருக்க அவரை எழுப்பி நலம் விசாரிக்கின்றனர். அருணாச்சலம் வந்து சுந்தரவல்லி கூப்பிட நா வரல அவன் என்ன எனக்காகவா கையை கிழிச்சான் இவ வீட்டை விட்டு போகக்கூடாது என்று தானே கிழிச்சான் அது தான் டாக்டர் ஏதேனும் பிரச்சினை இல்லை என்று சொல்லிட்டாங்க இல்ல நீங்களே இருந்து கூட்டிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பின்னாலேயே மாதவி, சுரேகா, நிற்கச் சொல்லி செல்ல சுந்தரவல்லி சென்று விடுகிறார்.
நந்தினி போய்விட்டாளா என்று கேட்க எப்படி போவா நீ எதுக்கு இப்படி பண்ண இது மாதிரி தான் எடாகூடமா பண்ணுவியா என்று கண்டிக்கிறார். நீயே குடிச்சிட்டு அவளை வெளியே போக சொல்லிட்டு அப்புறம் நீயே இப்படி பண்ணா எப்படி டா என்று கண்டிக்க நீங்க தானே டாடி அவ வீட்ல இருக்க ஏதாவது பண்ண சொன்னீங்க என்று சொல்ல அருணாச்சலம் சொல்லியது நினைத்து பார்க்கிறார். அப்போது அருணாச்சலம் சூர்யாவிற்கு ஃபோன் போட்டு நந்தினி வீட்டை விட்டு போக போகும் விஷயத்தை சொல்ல நான் தான் போக சொன்னேன் என்று சூர்யா சொல்லுகிறார். என்ன காரணம் என்று கேட்க, டெல்லி வீட்டில் நடந்த பிரச்சனைகளையும் விஜி கேட்ட கேள்வி அனைத்தையும் அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். அது மட்டும் இல்லாம இந்த வீட்ல இருக்க பிடிக்கல, அவ அவுங்க வீட்ல போய் சந்தோஷமா இருக்கட்டும் என்று சொல்ல, நீ கட்டின தாலி அவ கழுத்துல இருக்கு என்று சொல்ல, அப்போ கழட்டி கொடுத்துட்டு போக சொல்லுங்க என்று சொல்ல அருணாச்சலம் கோபப்படுகிறார்.
நம்ப நந்தினிக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்று சூர்யா சொல்ல, என்னடா பேசிட்டு இருக்க என்று கேட்கிறார் ஆமா டாடி என்னால பொண்டாட்டியா நினைக்க முடியலையே என்று சொல்லுகிறார். இப்போ அதெல்லாம் விடு நான் சொல்றத கேப்பியா நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது நந்தினி வீட்டை விட்டு போகக்கூடாது அதுக்கு நீ என்ன பண்ணுவியோ பண்ணு என்று சொல்லி போனை கட் பண்ணி விடுகிறார். அருணாச்சலம் அதுக்காக இப்படி பண்ணுவியா என்று கேட்டுக் கொண்டிருக்க நந்தினி உள்ளே வருகிறார். நந்தினி ஏன் சார் இப்படி பண்றீங்க என்று கேட்க என் டாடிக்காக நான் என்ன வேணா பண்ணுவேன் என் உயிரை கூட கொடுப்பேன் என சொல்லுகிறார்.
எனக்காக எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க என்று கேட்க நீ சூர்யாவோட வாழ்க்கையில வந்த வெளிச்சம் உன்னை எப்படி விட முடியும். நீ வீட்ல அவ்வளவு கேள்வி கேட்கும் போது எனக்கு மனசுக்கு சந்தோஷமா தான் இருந்தது. நீ கேட்ட கேள்வியும் நீ பேசின வார்த்தை எதுவும் எந்த தப்பும் இல்லை. நீ என் பையன் வாழ்க்கையில் வந்த பொக்கிஷம் உன்னோட அருமை உனக்கு புரிஞ்சுதா என்று தெரியல, இன்னைக்கு நிலைமை எப்படி வேணாலும் இருக்கலாம், நாளைக்கு எல்லாமே மாறும் நான் மாற்றி காட்டுவேன். மடிப்பிச்சை கேட்கிற மாதிரி கேட்கிறேன் என் பையனுக்காக அவன் கூட நீ வாழனும், நீங்க ரெண்டு பேரும் மனம் ஒத்து சந்தோஷமா வாழனும் அதை நான் பாக்கணும் என்று சொல்ல விஜி விவேக் இருவரும் பதறிப் போய் வந்து பார்க்கின்றனர். நான் கேட்டதை இவ்வளவு சீரியஸா எடுத்து இருப்பீங்கன்னு நினைக்கல தெரிஞ்சிருந்தா நான் கேட்டிருக்க மாட்டேன் என்று அழ, நீ கேட்டதுல எந்த தப்பும் இல்லை என்று சொல்லுகிறார்.
பொய்யா நடிக்கிறவங்க தான் சூப்பர்னு சொல்லுவாங்க நீ கேட்டதுல எந்த தப்பும் இல்ல நீ கண்ணை தொட என்று சொல்லுகிறார். அருணாச்சலம் விஜியை கூட்டிட்டு போவோமா என்று சொல்ல இருவரும் வருகின்றனர். வீட்டுக்கு போக போற சந்தோஷத்துல இருந்தேன் ஆனா இவரு பாட்டில்ல கைய கிழிச்சுகிட்டு இங்க வந்து படுத்துக்கிட்டு இருக்காரு வாழ முடியாமல் சாகவும் முடியாம அனுபவிச்சுக்கிட்டு இருக்க திடீர்னு உயிர் போயிருந்தால் என்ன பண்ண முடியும் என்று கஷ்டப்படுகிறார். மறுபக்கம் விஜி என்னால தான் எல்லா பிரச்சனைகளும் என்று நான் பயந்துகிட்டு இருந்தேன் என்று சொல்லுகிறார். அருணாச்சலம் வந்தவுடன் எல்லாத்துக்கும் நான்தான் காரணம் நான் கேட்டது அண்ணனை இவ்வளவு பாதித்திருக்கும் என்று எனக்கு தெரியாது மன்னிச்சிடுங்க என்று சொல்லுகிறார். நீ பண்ணதுல எந்த தப்பும் இல்லம்மா இது சூர்யாவுக்கு ஓட வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும் என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா நந்தினியை நேருக்கு நேராக நின்று அவன் உன் மடியிலேயே விழுந்து கிடக்கிறான் அப்படி என்னடி மாயம் மந்திரம் பண்ண என்று அர்ச்சனா கேட்கிறார்.
சூர்யாவிடம் சென்று நீ அவளுக்காக கைய கிழிச்சுக்கல இல்ல என்று சொல்ல, அவளுக்காக தான் என்று சொல்ல அவள ஒரு ஆளா என்று கேட்க அவ ஒரு ஆள் இல்ல அடி அவள் என் ஆளு என்று சூர்யா சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். நந்தினிடம் அர்ச்சனா எனக்கு இருந்தாலும் சூர்யா எனக்கு தான் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
