குடும்பத்துடன் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா..!

Web Ads

குடும்பத்துடன் அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் ஆலியா மானசா.

alya manasa birthday celebration video

alya manasa birthday celebration video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு ஒரு மகள் ஒரு மகன் இருக்கும் நிலையில் சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வந்தார்.அந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இவரது கணவரான சஞ்சீவ்,கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவரது முப்பதாவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)