ஈஸ்வரி கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ஈஸ்வரியின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார்.

baakiyalakshimi serial today episode update 15-05-25
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வழியில் ஸ்கூட்டியை நிறுத்தி ஹோட்டலில் நடந்த பிரச்சனைகளை நினைத்து கொண்டு விட்டு வீட்டில் இருப்பவர்களோட எதிர்ப்பு மீறி ரெஸ்டாரன்ட் திறந்திருக்கும் ஆனால் இந்த பிரச்சனையாள நம்ப கைவிடக்கூடாது இதுக்கு மேல எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிக்கணும் என்று கிளம்புகிறார். வீட்டுக்கு வந்தவுடன் கேட்டை திறக்க கேட்டாமல் இருக்கிறது யாருமே கேட்ட பூட்ட மாட்டாங்களே எதுக்கு பூட்டி இருப்பாங்க என்று யோசித்து கதவைத் தட்டி எழில் அத்தை என குரல் கொடுக்க ஈஸ்வரி ஹாலில் பாக்கியாவின் குரலை கேட்டும் கதவை திறக்காமல் இருக்கிறார் உடனே பாக்கியா அமைதியாக நிற்க கொஞ்ச நேரத்தில் எழில் இன்னும் அம்மா வரலையா நான் கூட்டிட்டு வரேன் என்று சொல்லுகிறார்.
வெளியில் வந்து லைட் போட்டவுடன் லைட் எரிவதை கவனித்த பாக்கியா எழில் என கூப்பிட இதோ வாரமா என்று சொல்லி கதவை திறந்து விடுகிறார் யார் கதவை பூட்டியது என்று கேட்க தெரியவில்லை என்று சொல்லுகிறார் நீ கூப்பிட்டிருக்கலாம் அல்லவா என்று சொல்ல கதவைத் தட்டி கூப்பிட்டேன் என்று பாக்யா சொல்ல பாட்டி ஹால்ல தான் இருந்தாங்க என்று சொல்லுகிறார் பிறகு இவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் ஈஸ்வரி பாக்யாவை நிற்க வைத்து இப்படித்தான் 12 மணிக்கு வருவார்களா? ஒரு குடும்பப் பொன்மானால் ஏழு மணிக்குள்ள வீட்ல இருக்கணும் என்று ஆரம்பிக்க பாக்யா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அத்தை உங்ககிட்ட குடும்ப பொம்பளையான்னு நிரூபிக்க எனக்கு டைம் இல்ல என்று சொல்லிவிட்டு சென்றுவிட மறுநாள் காலையில் ஈஸ்வரி பஞ்சாயத்தை கூட்டி விடுகிறார்.
எழில் மற்றும் செழியன் இருவரும் இப்ப எதுக்கு அப்பா வர சொல்றீங்க என்று கேட்க நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு தான் சப்போர்ட் பண்றீங்க அதனாலதான் கோபியை வர சொன்னேன் என சொல்ல கோபியும் வருகிறார் என்ன விஷயமா எதற்காக வர சொன்னீங்க என்று கேட்க பாக்கியா ஹோட்டல் கடையை முடிச்சுட்டு 12 மணிக்கு வீட்டுக்கு வர இது பத்தி நீ இன்னைக்கு அவ கிட்ட கேட்டு ஆகணும் என்று சொல்ல அது எப்படிம்மா கேட்க முடியும் ஹோட்டல் வச்சிருந்தா முன்ன பின்ன தான் வர முடியும் அவ இஷ்டத்துக்கு விட்ருங்க என்று சொல்ல அப்படி எல்லாம் விட முடியாது என்று சொல்லி பாக்கியவை கூப்பிடுகிறார் ஆனால் அமிர்தம் இறங்கி வந்து அம்மா 4:30 மணிக்கு ஹோட்டல் போய்ட்டாங்க என்று சொல்லுகிறார்.
12:30 மணிக்கு வந்து நாலரை மணிக்கு போய்ட்டாளா அப்ப நாலு மணி நேரம் தான் வீட்ல இருப்பாளா என்று ஈஸ்வரி கோபப்பட அவர் சாயங்காலம் வந்தா இத பத்தி பேசாம விடவே மாட்டேன் என்று சொல்லி முடிவோடு இருக்க மறுப்பக்கம் பாக்யா ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க செல்வி லேட்டா போனியே எதுவும் சொல்லலையாப்பா என்று கேட்க எல்லா வழக்கம் போல தான் குடும்ப பொம்பள வர நேரமா இது என்று ஆரம்பிச்சாங்க என்று சொல்லுகிறார். உன் மாமியார் தான் உன் பேச்ச மதிக்க மாற்றான்னு அவங்க பையன் வீட்டுக்கு போனாங்கள்ல அனுப்பிச்சு விட வேண்டியது தான் சொல்ல முடியும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் அமிர்தா சாப்பாடு பரிமாற அனைவரும் சாப்பாடு சூப்பராக இருப்பதாக சொல்லுகின்றன. ஆனால் ஈஸ்வரி இது என்ன நல்லா இருக்குன்னு எல்லாரும் பாராட்டுறிங்க என்று கோபப்பட,குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்? பாக்யா பிரச்சனையை சமாளிக்க என்ன செய்யப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 15-05-25
