அருண் வீட்டிற்கு சென்று அலப்பறை செய்த முத்து நண்பர்கள், ரோகினியை மிரட்டிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

ரோகினியை விஜயா மிரட்டியுள்ளார்.

siragadikka asai serial today episode update 15-05-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் இன்ஸ்பெக்டரை சந்தித்து விட்டு வெளியில் வர முத்து நீ வீட்டுக்கு போ மீனா நான் செட்டுக்கு போயிட்டு செல்வத்தை பார்த்து என்ன பண்றதுன்னு பேசிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார் மறுபக்கம் மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்கும் விஜயா வந்து உட்கார்ந்து பரிமாறிக் கொண்டு இது மாதிரி லேட்டா போனா கடையை யார் பார்த்துப்பாங்க என்று பேசிக் கொண்டிருக்க மனோஜ் பேச்சு வாக்கில் ரோகினி பார்த்துப்பா என்று சொல்லிவிடுகிறார் உடனே விஜயா என்ன சொன்ன ரோகிணி வராலா என்று கேட்க மனோஜ் முழித்துக்கொண்டே இருக்க விஜயா கேள்வி மேல் கேள்வி கேட்டு மனோஜ் வாயிலிருந்து உண்மையை வர வைக்கிறார்.
உடனே ரோகினியை கூப்பிட்டு நீ எதுக்கு அவன் ஷோரூமுக்கு போற உன் வேலைக்கு போனியா வந்தியா இருக்கணும் இல்லன்னா கைய கால ஒடச்சி வீட்ல உட்கார வச்சிடுவேன் என்று மிரட்ட, ஆனால் ரோகின போவதில்லை என்று சொல்ல பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மாதிரி பேசாத என்ன பேசினாலும் போய் தான் என் பையன் என்கிட்ட உண்மையை சொல்லிட்டா என்று சொல்லிவிட்டு வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார். மனோஜ் சாப்பிட்டு கொண்டிருக்க ரோகினி வந்து எதுக்கு நமக்குள் நடக்கிறது எல்லாம் உங்க அம்மா கிட்ட சொல்றேன் என்று கேட்க, அம்மா மடக்கி மடக்கி கேள்வி கேட்டாங்க என்னால ஒன்னும் சொல்ல முடியல அதனால தான் என்று சொல்லுகிறார். உடனே ரோகிணி அங்கிருந்து கோபமாக சென்று விட்டு இவனை இப்படியே விடக்கூடாது வேற வழியில தான் மாத்தணும் என்று நினைக்கிறார்.
மறுபக்கம் முத்து செட்டுக்கு வந்து நடந்த விஷயங்களை பற்றி அங்கு இருப்பவர்களிடம் பேசி என்ன செய்வதென யோசித்துக் கொண்டிருக்கிறார். உடனே அவரது நண்பர் சரக்கு பாட்டில் எடுத்து இப்ப நீ குடிச்சே ஆகணும் நம்ம குடிச்சிட்டு லைசென்ஸ் வாங்க போறோம் என்று சொல்லிவிட்டு குடிக்க கூப்பிட முத்து முதலில் வர மறுக்க பிறகு அவரும் குடித்து விடுகிறார். அவர்கள் அங்கிருந்து ஆட்டோவில் கிளம்புகின்றனர். மறுபக்கம் சீதா அருண் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க அருணுக்காக இருவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர் அருண் வந்தவுடன் இவர்கள் கோயிலுக்கு கிளம்ப முத்து நண்பர்களுடன் குடித்துவிட்டு அருண் வீட்டிற்கு வருகிறார். முத்து எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்காமல் அருண் வீட்டில் வம்பு இழுக்க அருண் இதெல்லாம் வீடியோ எடுக்கிறார். பிறகு முத்து என்ன சொல்லுகிறார்?அதற்கு அருண் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 15-05-25
