Web Ad 2

சுந்தரவல்லி எடுத்த முடிவு, நந்தினிக்கு வந்த பிரச்சனை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 15-05-25
moondru mudichu serial today promo update 15-05-25

நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் நான் டெய்லியும் போயிட்டு காலைல போய் சாயந்திரம் தான் வருவேன் நான் வேலைக்கு போகிறேன் தங்கச்சி படிப்புக்காக கடன் வாங்கி இருக்கேன் அந்த ரெண்டு லட்சத்தை அசல் வட்டி என இரண்டும் திருப்பிக் கொடுக்கணும், குடும்ப செலவு பாக்கணும் நான் வேலைக்கு போய் தான் ஆகணும் வேற வழி இல்லை என்று சொல்லுகிறார். வழி எல்லாம் இருக்கு ஆனா உனக்கு மனசு தான் இல்ல என்று சொல்ல, நான் மத்த விஷயத்துல உதவி கேட்கிறது வேற ஆனா இந்த விஷயத்துல நான் உதவி வாங்கறதுல எந்த அர்த்தமும் இல்லை என்று சொல்ல, இப்போ விஜி வீட்ல என்ன வேலை என்று கேட்க சமையல் வேலை பற்றி சொல்லுகிறார். நான் போயிட்டு நாலு மணிக்கெல்லாம் வந்து சமைச்சிடுவேன் என்று சொன்னால் அருணாச்சலம் கோபப்படுகிறார் உங்கள் வீட்டில் இருக்கிற வேலைக்காரவங்களே நான் வேலைக்காரங்களா நினைக்கிறது இல்ல நீ என்னம்மா இப்படி பேசிகிட்டு இருக்க என்று சொல்லுகிறார். நான் இந்த வேலைக்கு போயே ஆகணும் என்று நந்தினி உறுதியாக சொல்ல அருணாச்சலமும் சரி போயிட்டு வாமா என்று சொல்லி அனுப்ப சுந்தரவல்லி நிறுத்துகிறார்..

அவ இந்த வீட்ல இருந்து வேலைக்கு போறேன்னு சொல்றா ஆனா நீங்க எல்லாத்துக்கும் தலையாட்டி கிட்டு இருப்பீங்களா, அவை என்ன பண்ணாலும் இங்க இருந்து பண்ணக்கூடாது அவங்க அப்பா வீட்டில் இருந்து போய் பண்ணட்டும் அவ எங்கேயாவது போய் இட்லி சுடுவா இடியாப்பம் சுடுவா வெளிய யாரோட மருமகன்னு சொன்னா நம்மளோட குடும்பத்தோட மானம் தான் போகும் என்று கோபப்பட நந்தினி வட்டிக்கு வாங்குன காசு கொடுக்கறதுக்காக போகணும் என்று சொல்ல சுந்தரவல்லி நீ பிச்சை எடுத்தா கூட நான் கவலைப்பட மாட்டேன் ஆனால் நீ இந்த குடும்பத்தில் இருந்து வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் அவ சுயமரியாதைக்காக போகணும்னு நினைக்கிறார் விடு என்று சொல்லுகிறார். ஆனால் அருணாச்சலம் சுந்தரவல்லியை சமாதானப்படுத்த சுந்தரவல்லி உறுதியாக இருக்கிறார் உடனே சூர்யா வந்து ஏன் போகக்கூடாது என்று கேட்கிறார். நந்தினி வேலைக்கு போனா என்ன பிரச்சனை, அப்போ இவர்களின் வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லுங்க என்று சொல்லுகிறார் அவப்பட்ட கடனை அடைக்கனும்னு நினைக்கிற அதுக்கு அவ வேலைக்கு போறா இதுல என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.

நந்தினி இட்லி செய்வது இடியாப்பம் செய்வதுதான் இவங்களுக்கு பிரச்சனைனா அப்ப இவங்க லேப்டாப் எடுத்துக்கிட்டு போவது அவமானம் இல்லையா என்று கேட்கிறார். உடனே சுந்தரவல்லி நான் உன் பொண்டாட்டிய வேலைக்கு போக கூடாதுன்னு சொல்லல இந்த வீட்ல இருக்கிற ஒருத்தியை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்கிறேன் என சொல்ல சூர்யா மீண்டும் பேச ஆரம்பிக்க நந்தினி சூர்யாவை அமைதியாக இருக்க சொல்லுகிறார். அவ இங்க இருந்து தான் வேலைக்கு போவா நான் டெய்லியும் கார்ல டிராப் பண்ணிட்டு தான் வருவேன் இங்கு யாராவது வயிற்றெரிச்சலா இருந்தா அவங்கள மாத்திரை போட்டு சரி பண்ணிக்க சொல்லுங்க என்று சொல்லிவிட்டு நந்தினியை அழைத்துக்கொண்டு சென்று விடுகிறார். நீ அமைதியா இருந்திருந்தாவே நந்தினி மட்டும் போயிருப்பா நீ இப்படி பண்ண அதனாலதான் இது நடந்தது என்று சொல்ல அருணாச்சலத்துடன் சுந்தரவல்லி கோபப்படுகிறார்.

நந்தினி சூர்யாவிடம் ஏன் சார் இப்படி பண்றீங்க நீங்க அமைதியா இருந்தாலே நான் போயிருப்பேன் இப்ப தேவையில்லாம உங்க அம்மாவ வெறுப்பேத்திட்டு இப்படி கூட்டிட்டு வரணுமா என்று கேட்க, நீ முதல் முதலில் ஒரு வேலைக்கு போற கெத்தா போய் இறங்க வேண்டாமா? நீ யாரு சூர்யாவோட என்று ஆரம்பித்து சொல்ல வந்தேன் என சொல்லுகிறார். நான் விஜி அக்கா வீட்டுக்கு தானே போறேன் என்று சொல்ல அதெல்லாம் நீ நினைக்காத ஜாலியா இரு என்று சொல்ல எனக்கு அந்த வீட்ல என்ன நினைப்பாங்களோனு தான் தோணுது என்று சொல்லுகிறார். எந்த பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன் என்று சூர்யா சொல்லுகிறார். என்ன பிசினஸ் பண்ண போற நந்தினி என்று கேட்க பிசினஸ்லா இல்ல சார் இட்லி இடியாப்பம் செஞ்சு குடுக்க போறேன் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். பிசினஸ் எல்லாம் இது மாதிரி தான் ஸ்டார்ட் ஆகும் அப்புறம்தான் பெருசாகும் என்று சொல்ல என் பிரச்சனையை மட்டும் தீர்த்துட்டா போதும் என்று நந்தினி சொல்ல பிரச்சனை எல்லாம் உனக்கு கைக்குழந்த மாதிரி நந்தினி என்று சொல்லுகிறார்.

உனக்கு எல்லா பிரச்சனையும் முடிஞ்சா நீயா தேடி இன்னொரு பிரச்சனை தோல்ல போட்டுப்ப என்று சொல்ல நந்தினி சிரிக்கிறார். நந்தினியும் சூர்யாவும் பேசிக் கொண்டு வர மறுபக்கம் விஜி சாப்பாடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க விவேக் ஆபீசுக்கு கிளம்ப என்னங்க இந்த நேரம் பார்த்து ஆபீஸ்க்கு போறீங்க என்று கேட்க, இன்னைக்கு சுந்தரவல்லி மேடம் கிட்ட கையெழுத்து வாங்கி ஆபீஸ்ல கொடுக்கணும் நீ வேலைய பாத்துட்டு இரு நான் கொடுத்துட்டு வந்துடுறேன் என சொல்லி வெளியில் வர சூர்யாவும் நந்தினியும் வீட்டுக்கு வர விவேக் என்னடா சர்ப்ரைஸ் விசிட் என்று கேட்க, உன் பொண்டாட்டியும் நந்தினியும் ஏதோ பிசினஸ் ஸ்டார்ட் பண்ற போறாங்களாம் அதுக்கு நான் தான் சீப் கெஸ்ட் என்று சொல்லுகிறார். சரி நீங்க போய் வேலையை பாருங்க நான் போய் ஆன்ட்டி கிட்ட சைன் வாங்கிட்டு குடுத்துட்டு வரேன் என்று சொல்ல இதோட இது முக்கியமா நான் இருக்கிற வரைக்கும் உன்னை யாரும் எதுவும் சொல்ல முடியாது வா உள்ளே போகலாம் என்று அழைத்துச் செல்கிறார். நந்தினி வேலையை ஆரம்பிக்கலாமா என்று கேட்க விஜி அதுக்கு முன்னாடி சாமி கும்பிடலாம் என்று சொல்லி பூஜையை ஆரம்பிக்கின்றனர்.

பிறகு அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு சமைக்க ஆரம்பிக்கின்றனர். நீங்க காய்கறி கட் பண்றீங்களா நான் இடியாப்பம் செய்றேன் என நந்தினி சொல்ல வேணாம் நந்தினி நீ மாவு பெசை இவங்க சும்மா தானே இருக்காங்க வேலைய பிரிச்சு கொடுத்திடலாம் இவங்கள காய்கறி வெட்டவெடிச்சு விடலாம் என்று சொல்ல சூர்யா ஓகே என சொல்லுகிறார். விவேக்கும் சூர்யாவும் காய்கறி கட் பண்ண ஆரம்பிக்க, விஜியும் நந்தினியும் சமையல் வேலையை தொடங்குகின்றனர். உடனே சூர்யா விஜி இடம் என்ன விஜி திடீர்னு பிசினஸ் எல்லாம் தொடங்கிட்டீங்க என்று கேட்க இல்லனா ஏற்கனவே நான் கொஞ்சம் பேருக்கு செஞ்சு கொடுத்துட்டு தானே இருந்தேன் என்று சொல்ல நீங்களும் முதலாளி ஆக போறீங்க என்று சூர்யா சொல்ல நந்தினி ஏன் நாங்க முதலாளியாக கூடாதா என்று கேட்க சூர்யா நந்தினி ரசித்து பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி இந்த காண்ட்ராக்ட் மட்டும் மிஸ் ஆச்சுன்னா ஏழு கோடி லாஸ் ஆகும் அது அவன் தருவானா என்று கோபப்பட்டு பேச, ஏற்கனவே காலைல இங்க வர்றதுக்கு முன்னாடியே அவங்க அம்மாவை வெறுப்பேத்தற மாதிரி பேசிட்டு வந்தாரு இப்ப போன் பண்ணி அதே தான் செய்றாரு வீட்டுக்கு போனா என்ன நடக்க போகுதோ தெரியல என்று நந்தினி சொல்லுகிறார்.

வேலைக்குபோய் இருக்கால்ல அவளைஇந்த வீட்டுக்கு திரும்ப விடக்கூடாது என்று சொல்ல, நந்தினி வீட்டுக்கு வரும்போது கேட் பூட்டி இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 15-05-25
moondru mudichu serial today promo update 15-05-25