விராட்கோலி, இளையராஜா, ரஜினியின் பயோபிக் படங்கள்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

Web Ads

விராட்கோலியின் பயோபிக் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்..

மறைந்த இந்திய இராணுவ வீரர் பயோபிக் ஆன ‘அமரன்’ படம், ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்தியன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் வாழ்க்கை வரலாறும் சினிமாக உள்ளது என கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் வரை விராட்கோலியின் ஆதிக்கம் உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கலக்கி வருகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பப்ளிக் ஃபிகராக உள்ள விராட் கோலி வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்கள் நடைபெற்றுள்ளன.

அவரது திருமண வாழ்க்கை தொடங்கி, ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக ஒரு கோப்பை கூட வென்று கொடுக்க முடியவில்லை என்ற விமர்சனம்வரை தொடர்கிறது. இந்நிலையில் அவரது கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது தற்போது தகவல்கள் வருகின்றன.

முன்னதாக, சிம்பு தனது 49, 50 மற்றும் 51-வது படங்களில் கமிட் ஆகிவிட்டார். எனவே, விராட் கோலி வாழ்க்கை வரலாற்றில் சிம்பு நடிப்பது உறுதி செய்யப்பட்டால், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

அண்மையில் விராட் கோலி அளித்த பேட்டியில், அவர் அதிகம் கேட்கும் பாடல், சிம்பு நடித்த ‘பத்து தல’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நீ சிங்கம் தான்’ பாடல் என கூறினார்.

முன்னதாக இளையராஜா பயோபிக்கில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி பயோபிக் படத்தை இயக்கும் ஆர்வத்தில் உள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. பயோபிக் படங்களை தொடங்குவது என்பது செயலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

cricketer virat kohli biopic movie acting simbu
cricketer virat kohli biopic movie acting simbu