அமீர்கான்-ஷாருக்கான் மனைவியர் பெயர் கவுரி: சல்மானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா?

Web Ads

சல்மான்கானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா? என அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்..

பாலிவுட் ஸ்டார் அமீர்கான் தனது 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலி கவுரி ஸ்ப்ராட்டை அனைவருக்கும் அறிமுகம் செய்தார். அமீர் கானும், கவுரியும் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள்.

இந்த புது வசந்தம் குறித்து கவுரி தெரிவிக்கையில், சுமார் 2 ஆண்டுகளாக அமீரும் நானும் காதலித்து வருகிறோம். அன்பான, அக்கறையான ஜென்டில்மேனை தேடியபோது அமீர்கான் மீது காதல் வந்தது’ என்றார்.

இதனைத் தொடர்ந்து அமீர் தெரிவிக்கையில், ‘நான் ஒருவரது அருகில் இருந்தால் எனக்கு அமைதி கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட நபர் வேண்டும் என்று நினைத்தபோது கவுரி எனக்கு கிடைத்தார். எனக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விட்டது. 60 வயதில் திருமணம் செய்து கொள்வது எனக்கு சரியாக இருக்காது. இருந்தாலும் பார்க்கலாம்.

பெங்களூரில் வளர்ந்தவர் கவுரி. அவர் பல விதமான படங்களை பார்த்திருக்கிறார். அதனால், இந்தி படங்களை அவர் பார்க்கவில்லை. எனவே, என் படங்களை அவர் பார்க்கவில்லை. தற்போது, கவுரியை மீடியாவுக்கு தெரிந்துவிட்டது.

இதையடுத்து, மீடியாவை எதிர்கொள்ள அவருக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.மேலும் கவுரிக்கு பாதுகாவலரை ஏற்பாடு செய்திருக்கிறேன்’ என்றார்.

முன்னதாக, அமீர்கானுக்கு, 2 திருமணங்கள் மூலம் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். கவுரிக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். கவுரியை அமீர்கானின் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டார்கள்.

அமீர்கானின் 60-வது பிறந்த நாள் பார்ட்டியில் கவுரி மட்டும் அல்ல; முன்னாள் மனைவிகளான ரீனா தத்தா, கிரண் ராவ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். தன் முன்னாள் மனைவிகளை அடிக்கடி சந்தித்துப் பேசி வருபவர் அமீர்கான். இதை அவர் பலமுறை கூறியிருக்கிறார். அதனால், அவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு முன்னாள் மனைவிகள் வந்ததில் ஆச்சரியம் இல்லை.

இது குறித்து, அமீர்கானால் மட்டும் முன்னாள் மனைவிகளுடன் எப்படி இப்படி நட்பாக இருக்க முடிகிறது? என பலர் வியக்கிறார்கள்.

பாலிவுட்டின் மூன்று முக்கியமான கான்களாக ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகியோர் இருக்கிறார்கள். அதில் ஷாருக்கானின் மனைவி பெயர் கவுரி. தற்போது அமீர்கானுக்கு கிடைத்திருக்கும் காதலியின் பெயரும் கவுரி. இதையடுத்து, சல்மான்கானுக்கும் ஒரு கவுரி கிடைப்பாரா? என சல்மான் ஃபேன்ஸ் கேட்பது வைரலாகி வருகிறது.

actor aamirkhan about gauri spratt and wedding plans
actor aamirkhan about gauri spratt and wedding plans