பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: இயக்கு கோபி நயினார் அதிருப்தி..

பெரியார் விருதை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளார் கோபி நயினார். இது பற்றிய விவரம் காண்போம்..

‘அறம்’ படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதை மையப்படுத்தி இயக்கியிருந்தார் கோபி நயினார். இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் மனுசி, ஜெய் நடிப்பில் கறுப்பர் நகரம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

முன்னதாக, பா,ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படமும் என் கதைதான் என கோபி நயினார் வாதிட்டார். இதனால், இருவருக்குமே முரண் ஏற்பட்டது.

இயக்குனராக மட்டும் இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், ஆளும் கட்சி குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால், அவரை ஆளும் கட்சி ஆதரவாளர்கள் திட்டி வருகின்றனர். இச்சூழலில் கோபி நயினார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில்,

‘நான் ‘அறம்’ என்கிற திரைப்படத்தை இயக்கினேன். அத்திரைப்படத்தின் கருத்து என்னவென்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு துயரமென்றால், இந்த அரசு எதுவும் செய்யாது என்பதே. அதற்காக தான் திராவிடர் கழகம் என்னை பாராட்டி தந்தை பெரியார் விருது வழங்கியது.

நிகழ்காலத்தில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கும் போது இந்த செயல் என்னை அவமானப்படுத்துகிறது. அறம் என்ற கதைக்கு விருது வழங்கி கொண்டாடிய திராவிடர் கழகம் நிஜ வாழ்வில் நடைமுறைப்படுத்தும் போது, என்னை இந்த சமூகத்தின் எதிரியாக சித்திரிக்கிறது.

இதுபோன்ற காரணங்களுக்காக அறம் திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன், என்றும் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் போராட்ட உணர்வோடு’ என குறிப்பிட்டுள்ளார்.

 

director gopi nainar return his periyar awards
director gopi nainar return his periyar awards