Web Ads

ஓடிடி. தளத்தில் இந்த வாரம் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

Web Ad 2

ஓடிடி.யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் பார்ப்போம்..

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கிய இப்படத்தில் பவிஷ், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

டிராகன்: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’. படத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், மரியம் ஜார்ஜ், கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்திருந்தனர். விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் மெகா ஹிட் ஆகியுள்ளது.

ஆபிஸர் ஆன் டியூட்டி: திரில்லர் விரும்பிகளுக்காகவே இந்த வாரம் ஓடிடியில் ‘ஆபிஸர் ஆன் டியூட்டி’ ரிலீசாகிறது. குஞ்சாக்கோ போபன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ள இப்படத்தில் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்: யூடியூப் பிரபலம் ஹரி பாஸ்கர், பிக்பாஸ் லாஸ்லியா நடிப்பில் வெளியான இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் இன்றைய காலத்து காதலை மையமாக வைத்து ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பேபி பேபி: ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நக்ரா உள்ளிட்டோர் நடித்த ‘பேபி & பேபி’ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

* பிரவீன் ராஜ், விவேக், விவேக் பிரசன்னா, சாக்சிஅகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ரிங் ரிங்’ ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

* ஜி.சங்கர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிந்தியா நடித்த ‘தினசரி’ என்ற படம் டெண்ட்கோட்டா ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. இதில், விரும்பிய படத்தை வீட்டிலிருந்தே கண்டு களிப்போம்.!

movies are release on ott this week