விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் அர்ஜுன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் அஜித், திரிஷா, ஆரவ்,ரெஜினா, அர்ஜுன் போன்ற முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் ரிலீஸ் குறித்த எந்தவித அறிவிப்பும் படக்குழு வெளியிடாமல் இருக்கிறது.

அந்த வகையில் அர்ஜுன் லேட்டஸ்ட் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சண்டைக் காட்சிகளை நான் முடித்து விட்டதாகவும் டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்ற தகவலை கூறியுள்ளார்.

இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.