என் மனைவி மற்றும் மகளுக்கு நன்றி: நடிகர்-இயக்குனர் பிரித்விராஜ் நெகிழ்ச்சி

தனது மனைவி மற்றும் மகளுக்கு பிரித்விராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த பின்னணியை காண்போம்.
மலையாளத் திரையுலகில் நடிகராக, தயாரிப்பாளராக இயக்குநராகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர் பிரித்விராஜ். இவர் இயக்கத்தில் மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்து, 2019-ம் ஆண்டில் வெளியான ‘லூசிஃபர்’ படம் ரசிகர்களை கொண்டாட செய்தது.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் 2-வது பாகமாக ‘எம்புரான்’ படம் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் லீட் கேரக்டரில் நடித்து உருவாகி, வரும் மார்ச் 27-ம் தேதி பான் இந்திய படமாக திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேசிய பிரித்விராஜ்,’ நான் இயக்குநராக மாறியது தன் மனைவி சுபத்ரா மற்றும் மகளுக்கு பிடிக்கவில்லை. இயக்குநர் என்பது மிகப்பெரிய டாஸ்க்காக உள்ள நிலையில், அதற்காக முழு நேரத்தையும் செலவழிக்க வேண்டியிருந்ததால், என் மனைவி மற்றும் மகளுடன் நான் செலவழிக்கும் நேரம் என்பது இல்லாமலேயே போனது. இதனால், அவர்கள் இருவருக்கும் நான் இயக்குநர் ஆனது சுத்தமாக பிடிக்கவில்லை.
ஆனாலும், என்னுடைய பேஷனை கருத்தில் கொண்டு அவர்கள் எனக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர். அதற்கு என் மனைவி மற்றும் மகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
