ஒரு பூனை அடிக்கடி இப்படித்தான் தொல்லை பண்ணும்: விஷால் குறித்து பாடகி சுசித்ரா..

Web Ads

பாடகி சுசித்ரா, நடிகர் விஷால் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளதாவது:

‘விஷாலின் இந்த நிலைமையை பார்த்து பலர் வருத்தப்பட்டு இருப்பீர்கள். நான் விஷால் குறித்து பல வருடத்திற்கு முன்னால் நடந்த விஷயத்தை இப்போது சொல்கிறேன்.

கார்த்திக்குமாருடன் நான் வாழ்ந்து கொண்டு இருந்தபோதுதான், இந்த சம்பவம் நடந்தது. அடிக்கடி கார்த்திக் குமார் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி விடுவார்.

ஒரு நாள் கார்த்திக்குமார் இல்லாதபோது, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்தபோது விஷால் கையில் ஒயின் பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் போதையில் இருந்தார் என்பது அவரை பார்க்கும்போதே தெரிந்தது.

அவர், கார்த்திக்குமார் இல்லையா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உடனே, நான் உள்ளே வரவா? என்று கேட்டார். நான் நோ என்று சொல்லி விட்டேன். உடனே அவர், கையில் இருக்கும் ஒயின் பாட்டிலை என்னிடம் நீட்டி ‘இதற்காகத்தான் வந்தேன்’ என்றார்.

கார்த்திக்குமார் இல்லாத நேரமாக பார்த்து வீட்டுக்கு வந்து, எனக்கு ஒயின் கொடுத்தார். நான் அந்த ஒயின் பாட்டிலை வாங்காமல், ‘கௌதம் மேனன் அலுவலகத்தில்தான் கார்த்திக்குமார் இருக்கிறார். அங்கே போய் இந்த ஒயின் பாட்டிலை கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டு, கெட்ட வார்த்தையால் அவனை திட்டினேன். அது அவன் காதில் விழுந்துவிட்டது.

என்னை நீங்க ஏதோ சொன்னீங்களே என்று கேட்டார். அப்போது நான், உங்களை சொல்லவில்லை. ஒரு பூனை அடிக்கடி இப்படித்தான் தொல்லை பண்ணும், நீங்க போங்க’ என்று சொல்லிவிட்டு கதவை சாத்தி விட்டேன். இப்படி மோசமானவர்தான் விஷால்.

அவர் நன்றாக குணமடைய வேண்டுமென்றுதான் அனைவரும் பிரார்த்தனை செய்துகொண்டு இருக்கிறீர்கள். அன்று ஒயின் பாட்டிலை கையில் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த கையால், இப்போது மைக்கை கூட பிடிக்க முடியாமல் நடுங்கி கொண்டிருக்கிறது. அதை பார்க்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது’ என்று சுசித்ரா பேசியிருக்கிறார்.

சுசித்ராவின் இந்த பேச்சை கேட்ட இணையவாசிகள், ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில், இப்படி அவரைப் பற்றி வரம்பு மீறிப் பேசுவது சரியில்லை என சுசித்ராவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

singer suchitra spoke negatively about vishals health
singer suchitra spoke negatively about vishals health