ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ டிரெய்லர் வெளியீடு; எப்போது தெரியுமா?

Web Ads

ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ பட டிரெய்லர் வெளியீடு பற்றி இங்கு பார்ப்போம்..

இந்திய சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் ராம்சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்த ‘கேம் சேஞ்சர்’ பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸாகிறது. இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

சமீபத்தில் அமெரிக்காவில் இப்படத்தின் புரொமோஷன் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்களுக்கு வழக்கம்போல பல கோடி ரூபாய் செலவளித்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்படத்தில் வரும் 5 பாடல்களுக்கு மட்டும் சுமார் ரூ.96 கோடி செலவளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தசூழலில், புத்தாண்டை முன்னிட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ பட டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த டிரெய்லர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

game changer trailer release date announced
game changer trailer release date announced