Pushpa 2

அமீர்கான் தயாரிக்கும் படத்தில், அவரது மகனுக்கு ஜோடியாகிறார் சாய்பல்லவி..

மலர் டீச்சராக ‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமாகி, பாலிவுட் வரை வளர்ந்த சாய்பல்லவி பிஸி ஷெட்யூல் குறித்து பார்ப்போம் வாங்க..

சாய் பல்லவி ‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ்ப் பட வாய்ப்புகளையும் பெற்றார். அதில், சிவகார்த்திகேயனுடன் ‘அமரன்’ படத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

தற்போது, நாக சைதன்யாவுடன் ‘தண்டேல்’ படத்திலும், பாலிவுட்டில் ‘ராமாயணம்’ படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், இயக்குனர் வேணு யெல்டாண்டி இயக்கும் ‘எல்லம்மா’ படத்தில் நடிகர் நித்தினுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான், ‘மகாராஜ்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, தமிழில் பிரதீப் ரங்கனாந்தன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லவ் டுடே ‘படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஜோடியாக நடித்திருக்கிறார். ‘லவ்யப்பா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனையடுத்து, நடிகை சாய் பல்லவிக்கு ஹீரோவாக ஜுனைத்கான் நடிக்க உள்ளார். இப்படத்தை அமீர்கான் தயாரிக்க, சுனில் பாண்டே இயக்க உள்ளார்.

சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாக உள்ளது.

sai pallavi to pair with aamir khans son
sai pallavi to pair with aamir khans son