கணவரை இப்படியா பாடாய் படுத்துவீங்க: நடிகை வரலட்சுமியின் ஹனிமூன் ட்ரிப் நிகழ்வு..

Web Ads

ஹனிமூன் என்றால் தமிழில் தேனிலவு என்று பொருள் தேனிலவு என்றால் இதற்கு என்ன விளக்கம்? என நடிகை வரலட்சுமியிடம் தான் கேட்க வேண்டும் போல்.! ஏன்னா.. அவர் போட்ட இன்ஸ்டா பதிவு அப்டி..! வாங்க மேட்டருக்குள்ள போவோம்..

நடிகர் சரத்குமாரின் மூத்த மனைவியான சாயா தேவிக்கு மகளாக பிறந்த வரலட்சுமி, சமீபத்தில் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்தது தெரிந்ததே.

தாய்லாந்தில் ட்ரீம் வெட்டிங்கை நடத்தி முடித்த இருவரும், தற்போது ஜிடி ஹாலிடேஸ் அமைத்துக் கொடுத்த ஹனி மூன் ட்ரிப்பை ஆப்பிரிக்காவின் மாஹே தீவில் கொண்டாடி வருகின்றனர்.

ஹனிமூனில் எடுத்த வீடியோ ஒன்றை தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கமெண்ட்டுகளை அள்ளி வருகிறார். கணவரை இப்படியா பாடாய்ப்படுத்துவீங்க என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி நடிகையாக வளர்ந்து இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் மனைவியாகவும் நடித்தார். அடுத்ததாக மேக்ஸ் எனும் கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இருவரும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகின.

கடந்த ஜூலை 3-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், த்ரிஷா உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

ஜூலை மாதம் திருமணம் ஆனதில் இருந்தே இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஹனிமூன் ட்ரிப் அடித்துக் கொண்டு தான் இருப்பதாக கூறுகின்றனர்.

மஹே தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே மனைவி ஒரு நல்ல போட்டோ போட, கணவன் 100 முறை போட்டோக்களை எடுக்க வேண்டும் என ஜாலியாக வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.

‘அண்டர் டேக்கர் மாதிரி இருந்தாலும், மனைவின்னு வந்துட்டா அடிமை தான் பாஸ்’ என கணவன்மார்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ள நிலையில், பீச்சில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தொடர்ந்து ஏகப்பட்ட வீடியோக்களும் போட்டோக்களும் அடுத்தடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தை அலங்கரிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் வரலட்சுமியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

வர்ற லட்சுமியை யாருக்குத்தான் பிடிக்காது.!

actress varalaxmi sarathkumar nicholai sachdev honeymoon happy; viral twitt..
actress varalaxmi sarathkumar nicholai sachdev honeymoon happy; viral twitt..