விஜயகாந்திற்கு பிறகு விஜய்க்குதான் எழுச்சி: நடிகர் விஷாலின் ‘வைரல்’ பேச்சு..
விக்கிரவாண்டியில் ஒரு சிவகாசியோ, அல்லது முந்தி வந்தது தீபாவளியோ.! ஆம்.. தனியொரு மனிதருக்கு, மக்கள் திரண்டு எழுச்சியுடன் சங்கமிப்பது என்பதே வரலாறுதான். அவ்வகையில், நாளை தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாடு நடைபெற இருக்கிறது என்றால் மிகையல்ல.
இந்நிலையில், இத்தகு எழுச்சிமிகு நிகழ்வு குறித்து நடிகர் விஷால் தற்போது தெரிவித்துள்ள கருத்துதான் வைரலாய் தெறித்து வருகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு, தற்போது தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாபிக்காக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலில் களமிறங்க இருக்கின்றார் என்ற பேச்சு போய்க் கொண்டிருந்தது. என்னதான் விஜய் அரசியலில் வருவது உறுதியானாலும், எப்போது வருவார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.
இந்த சமயத்தில் தான் கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தன் அரசியல் என்ட்ரியை உறுதிப்படுத்தினார்.
விஜய் அரசியலில் ஈடுபட்டாலும் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டும் என்பது, ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரின் கருத்தாகவும் உள்ளது.
இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டை பற்றி பலர் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், விஜய்யின் அரசியல் மாநாட்டை பற்றி நடிகர் விஷால், ‘விஜய்யின் மாநாட்டிற்கு செல்வேன்’ என்றார். தற்போது மாநாட்டிற்கு செல்லவில்லை என கூறியுள்ளார்.
மேலும், அரசியலை பொறுத்தவரை விஜயகாந்திற்கு பிறகு, விஜய்க்கு தான் எதிர்பார்ப்பு இருக்கின்றது’ எனவும் கூறினார்.
விஷால், ‘தவெக மாநாட்டிற்கு செல்லவில்லை’ என எடுத்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்தால் என்ன பதில் சொல்வாரோ.?