’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

Web Ads

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்தினை எழுதியுள்ளார் பிரேம் குமார். முதல் பாகத்தின் முடிவில் இருந்தே 2-ம் பாகம் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ‘96’ 2-ம் பாகத்தினை உருவாக்கும் பணிகளில் இறங்கினார். ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்கள் இப்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அவர்களுடைய சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ஒத்திவைத்து விட்டார்கள். ஆனால், முதல் பாகத்தில் உள்ள நடிகர்கள் இல்லாவிட்டால் 2-ம் பாகத்தினை உருவாக்கவே மாட்டேன் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ‘96’ 2-ம் பாகத்தின் கதையினை படித்துவிட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அந்தளவுக்கு அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

மேலும், தான் இதுவரை எழுதியுள்ள கதையிலும், இனிமேல் எழுதயிருக்கிற கதையிலும் ‘96’ 2-ம் பாகத்தின் கதையே சிறந்தது எனவும் பிரேம் குமார் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது படமாக உருவாகுமா என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. அரவிந்த்சாமி, கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய ‘மெய்யழகன்’ படமும் வரவேற்பு பெற்றது நினைவுகூரத்தக்கது.

96 movie second part actors says prem kumar
96 movie second part actors says prem kumar