திருமணத்திற்கு தயாரான நான்கு நட்சத்திர ஜோடிகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

திரை உலகில் நடிகர் நடிகைகளாக இருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் போது காதல் ஏற்பட்டு திருமண பந்தத்திலும் நிஜ ஜோடிகளாக இணைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் வெகு விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ள நான்கு ஜோடிகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் :

இருவரும் திரைப்பட பிரபலங்களாக இருக்கும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் இவர்களுக்கு திருநெல்வேலியில் திருமணம் நடைபெற உள்ளது.

  1. கவின் – மோனிகா :

சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த கவின் தனது பள்ளி பருவத்தோடு மோனிகாவை காதல் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் இருபதாம் தேதி நடைபெறுகிறது.

  1. ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதி :

தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் மகளுக்கும் வெகுவிரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

  1. வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி :

தெலுங்கு திரையுலகில் பிரபலங்களாக வலம் வரும் இவர்களுக்கும் வெகு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இருவருக்கும் ஜூன் ஒன்பதாம் தேதி பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.