அஜித் இல்லாமல் காதல் கோட்டை படத்தின் 25 ஆம் ஆண்டு கொண்டாட்டம் விழா கோலாகலமாக நடைபெற்று உள்ளது.

25 Years of Kadhal Kottai : தமிழ் சினிமாவில் இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் தல அஜித் தேவயானி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் காதல் கோட்டை. இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக ஹூரா நடித்திருந்தார்.

இன்றைய ராசி பலன்.! (13.7.2021 : செவ்வாய்க் கிழமை)

இந்த படத்திற்கு தேவா இசையமைக்க தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இதனை ஒரு விழாவாக கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் அஜித் மற்றும் ஹீராவை தவிர்த்து மற்ற அனைவரும் பங்கேற்றனர்.

இதுகுறித்து தங்கர்பச்சான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “காதல் கோட்டை” திரைப்படம் எனக்கு எட்டாவதுப்படம். இதன் 25 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்வு நேற்று அனைவருக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் இனிதே நடந்தேறியது. 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. #காதல்கோட்டை என பதிவு செய்துள்ளார்.

2 வருஷம் தவம் இது.., வலிமை Motion Poster எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..!

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.