பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 18 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
18 Contestants List of Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடங்கியதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட வீட்டில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. முதல் போட்டியாளர் இசை வாணியை தொடர்ந்து அடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக ராஜூ ஜெயமோகன், மதுமிதா ஆகியோர் உள்ளே சென்றதைத் தொடர்ந்து மேலும் மூன்று போட்டியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் தான்
4. சினிமா விமர்சகர் அபிஷேக்
5. திருநங்கை நமீதா மாரிமுத்து
6. தொகுப்பாளினி பிரியங்கா
இவர்களை தொடர்ந்து
7. அபினய் – ஜெமினி கணேசன் பேரன்
8. பவனி ரெட்டி – சின்னதம்பி சீரியல் நடிகை
9. சின்ன பொண்ணு ஆகியோர் உள்ளே சென்றனர்.
மேலும்
10. நடியா – மாடலிங், மலேசியா
11. வருண்
12. இம்மான் அண்ணாச்சி
13. சுருதி
14. அக்ஷரா கௌடா
15. ஐக்கி பெர்ரி – ராப் பாடகி
16. தாமரை செல்வி
17. சிபி சந்திரன்
18. நிரூப்