100 Crores Movies in Suriya Career
100 Crores Movies in Suriya Career

சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

100 Crores Movies in Suriya Career : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. அஜித், விஜய் ஆகியோர் டவுனில் இருந்த காலத்தில் டாப் ஹீரோவாக இருந்தவர் சூர்யா.

ஆனால் தற்போது சூர்யா கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். எதிர்பார்ப்புகளுடன் வெளியான படங்களும பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ரஜினிக்கு பிறகு ரூபாய் 100 கோடி ஹிட் கொடுத்தது விஜய்யும் இல்லை அஜித்தும் இல்லை இவர் தான் – பலருக்கும் தெரியாத தகவல்.!

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய கம் பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப் போய்க் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரூபாய் 100 கோடி வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

1. சிங்கம் 2

2. 24

3. சிங்கம் 3

4. 7ம் அறிவு

அஜித், விஜய் ஆகியோர் ரூபாய் 100 கோடி வசூல் கொடுக்கும் முன்பாகவே ஏழாம் அறிவு படத்தின் மூலமாக 100 கோடி வசூலை கொடுத்தவர் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.