‘வேட்டுவம்’ படம் பற்றி இயக்குநர் பா.ரஞ்சித் அப்டேட்..

‘அட்டைக்கத்தி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். பின்னர் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டர் பரம்பரை என்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இந்நிலையில் தற்போது இயக்கி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படம் அறிவியல் புனைகதை படமாக இருக்கும் என அப்டேட் கொடுத்துள்ளார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் தினேஷ், ஆர்யா, சோபிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில், ‘வேட்டுவம்’ படம் அறிவியல் புனைகதை படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இவரது தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருவது நினைவுகூரத்தக்கது.
