தளபதி 64 படத்தில் நானும் இருக்கேன்.. எனக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என கூறி ட்வீட் செய்துள்ளார் பிரபல நடிகரான பிரேம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
ஏற்கனவே இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், 96 புகழ் கௌரி, சேத்தன் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரேம் அவர்களும் இணைந்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜயுடன் இரண்டாவது முறையாக நடிக்கிறேன். அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜிற்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
I’m so happy to tell you all that I’m a part of the ensemble cast of #Thalapathy64! ☺️???? Elated to share screen space with #Thalapathy @actorvijay sir for the second time! ???? Thank you so much @Dir_Lokesh bro, @XBFilmCreators and @Jagadishbliss bro for this huge opportunity! ???????? pic.twitter.com/gVvaHwujSC
— Prem Kumar (@premkumaractor) November 15, 2019