தல அஜித்தை தான் எனக்கு தெரியும்.. சூப்பர் ஸ்டாரை கொஞ்சம் தெரியும். விஜயை எல்லாம் எனக்கு தெரியவே தெரியாது என பேசியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு சினிமாவில் சர்ச்சை நடிகையாக வலம் வந்த ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னையில் குடியேறி தமிழ் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகின்றார்.
மேலும் முகநூல் பக்கத்தில் இவருடைய பெயரில் உதயநிதி ஸ்டாலின் தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி தன்னை பயன்படுத்தி கொண்டதாக பதிவு ஒன்று பதிவாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அது நான் பதிவு செய்த பதிவல்ல.. போலி கணக்கில் பதிவான பதிவு. உதயநிதி என்னிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை என விளக்கமளித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஸ்ரீ ரெட்டி அஜித் தெலுங்கு படங்களிலும் நடித்திருந்தால் அவரை எனக்கு தெரியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கொஞ்சம் தெரியும்.
ஆனால் எனக்கு விஜயை எல்லாம் தெரியாது என பேசியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை விளாசி எடுத்து வருகின்றனர்.
#அஜித் தெரியும்.., #விஜய் யாரு..? – ஸ்ரீ ரெட்டி ஷாக்கிங் பேச்சு..! https://t.co/MbbeJ7qzCE#Srireddy #Pressmeet #Ajith #Vijay #ThalaAjith #Thala #ThalapathyVijay #Thalapathy #UdhayanidhiStalin #PoliticalNews #Political #DMK #AIADMK @SevenSri #shocking #news #ViralVideos
— Kalakkal Cinema (@kalakkalcinema) November 16, 2019