அரசு விழாவையே அஜித், விஜய் ரசிகர்கள் அதிர வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். தமிழகத்தில் எந்த மூலையில் இவர்களின் பெயர் கூறினாலும் ரசிகர்களின் பிரம்மாண்ட எதிரொலி மீண்டும் கேட்கும்.
அப்படி தான் சமீபத்தில் அரசு விழா ஒன்றில் தல ரசிகர்கள் யார் என கேட்க ரசிகர் பட்டாளம் ஒன்று அரங்கை அதிர வைக்கிறது.
அதன் பிறகு தளபதி ரசிகர்கள் யார் என கேட்க மிக பெரிய ரசிகர் பட்டாளம் அரங்கத்தையே அதிர வைத்துள்ளது.