ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தமிழா தமிழா. இயக்குனர் கரு பழனியப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இதனை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழா தமிழா நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் மீண்டு ஒளிபரப்பாக தொடங்க எடிட்டராக பயணத்தை தொடங்கி பிறகு தொகுப்பாளர் என படிப்படியாக வளர்ந்து வந்த ஆவுடையப்பன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் தொகுத்து வழங்க தொடங்கிய முதல் வாரம் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக உள்ளது, இல்லை என்ற தலைப்பில் விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், அமைச்சர் கீதா ஜீவன், காங்கிரஸ் எம் எல் ஏ விஜயதரணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து இந்த வார நிகழ்ச்சியில் ஜோதிடம் சார்ந்த டாபிக்கில் விவாதங்கள் நடைபெற உள்ளது, இதற்கு சிறப்பு விருந்தினராக நடிகை நளினி, நடிகர் மாரிமுத்து பங்கேற்கிறார், எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் இவரை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர், இந்த வாரம் ஜீ தமிழ் தமிழா தமிழா நிகழ்ச்சியில் சம்பவம் இருக்கு என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இது குறித்த ப்ரோமோ வீடியோ சமூக வளையதள பக்கங்களில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.

YouTube video