ஜீ தமிழின் இதயம் சீரியல் ப்ரோமோ பாராட்டுகளை குவித்து வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத்துடன் சீரியல்கள் மாறுபட்ட ரியாலிட்டி ஷோக்களை களமிறக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய சீதாராமன் அண்ணா சண்டக்கோழி போன்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்ததாக இதயம் என்ற புத்தம்புதிய சீரியல் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

ஜனனி அசோக் குமார் நாயகியாக நடிக்க மற்றும் பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஜனனி கணவர், குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்து வர வெளியே செல்லும் அவளது கணவர் விபத்தில் சிக்கி கொண்டு உயிருக்கு போராடுகிறார். இன்னொரு பக்கம் ஒரு ஜோடிக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் செய்திருக்க மாப்பிள்ளை திடீரென நெஞ்சில் கை வைத்து கீழே விழ இருவரையும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்க ஜனனியின் கணவனின் இதயம் இந்த நபருக்கு மாற்றப்படுகிறது.

இதயத்தை கொடுத்து உயிரை விடுகிறார் ஜனனியின் கணவர். இந்த இதயத்தை சுமக்கும் நபருக்கு ஜனனியை பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஓர் உணர்வு வந்து போக அடுத்து இவர்களின் வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன என்பதுதான் இந்த சீரியலில் கதைக்களம் என்பது உறுதியாக தெரிகிறது.

இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் வித்தியாசமான கதையாக இருக்கிறது, ப்ரோமோவை பார்க்கும் போதே கண்ணு கலங்குகிறது.. சீரியலுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

YouTube video