ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களின் மனம் கவர்ந்து சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

மேலும் தொலைக்காட்சி நிறுவனம் மக்களை கவரும் வகையில் புதுப்புது கதைக்களத்தை களமிறக்கி வருகிறது. ஏற்கனவே ஒளிப்பரப்பாக தொடங்கியுள்ள கார்த்திகை தீபம், சீதா ராமன், சண்டக்கோழி போன்ற சீரியல்கள் தொடர்ந்து நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது.

இப்படியான நிலையில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி புத்தம் புதிய சீரியலாக கனா களமிறங்க உள்ளது. ஏற்கனவே இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கிறது என்று எதிர்பார்ப்பை கூட்டிய நிலையில் தற்போது மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கனா, சண்டக்கோழி போன்ற சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் கனா சீரியல் மதியம் 2 மணி முதல் 2.45 வரை என 45 நிமிடங்கள் ஒளிப்பரப்பாக உள்ளது. அதனை தொடர்ந்து சண்டக்கோழி சீரியல் மதியம் 2.45 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இரண்டு இதயங்களின் உணர்வுபூர்வமான காதல் கதையாக ஒளிபரப்பாக உள்ள இதயம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.