இந்த ஆண்டு இளையோர் (யூத்) ஒலிம்பிக் போட்டி பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கு பெறுகின்றன.
இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து  47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
நேற்று நடந்த பெண்களுக்கான ஜூடோ போட்டியின் 44 கிலோ உடல் எடைப பிரிவில் இறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி 0-11 என்ற புள்ளியில் மரியா கிமின்சிடம் தோல்வி அடைந்தார். இருந்தும்  தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
 இப்போட்டியில் இந்தியர் ஒருவர் பதக்கம் பெறுவது  இதுவே முதல்முறையாகும். துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் துஷர் மானே 247.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.