
இந்தியா சார்பில் இளையோர் ஒலிம்பிக் ஆடவருக்கான ஏர் ரைபிள் (10 மீ ) போட்டி பிரிவில் விளையாடிய இந்திய வீரர் சௌரவ் சௌதரி இந்தியாவிற்கு தங்க பதக்கம் வெற்று தந்துள்ளார். இவர் 244.2 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது . முதல் பாதியில் இந்திய அணி 9 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தது.
அடுத்த பாதியில் இந்திய அணியில் அனைத்து வீராங்கனைகளைலும் தலா ஒரு புள்ளி எடுத்து தர அணியில் புள்ளிவிவரம் 16 ஆக உயர்ந்தது . இத்தொடரின் சிறப்பு என்ன என்றால், இந்திய அணியின் கோல் கீப்பர் மட்டுமே எந்த கோலும் அடிக்கவில்லை மற்ற அனைவரும் புள்ளிகள் எடுத்தனர். எனவே இந்திய அணி சிறப்பாக ஆட்டத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றது