
ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக யோகி பாபு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர்.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்திற்காக ரூ 80 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிய நிலையில் நடிகர் யோகி பாபு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் அவர் இந்த படத்திற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தெரியவந்துள்ளது. அதேபோல் தமன்னா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் படவே மூன்று கோடி ரூபாய் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
