Yogi Babu in Paiya Movie

கார்த்தியின் பையா படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்துள்ளார் நடிகர் யோகிபாபு. அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Yogi Babu in Paiya Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்களை நடித்து வருகிறார். காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகும் சில படங்களில் நடித்துள்ளார்.

அஜித், விஜய், சூர்யா, ரஜினி என தமிழ் சினிமாவின் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் மிகப் பெரிய காமெடி நடிகராக இடம் பிடிப்பதற்கு முன்னதாக லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பையா படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நடித்துள்ளார்.

இந்தக் காட்சியில் யோகி பாபு நடித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.