Web Ad 2

சினிமா உலகில் ஆஸ்கர் விருது ஏன், எதற்கு, யாரால் கொடுக்கப்படுகிறது தெரியுமா?

உலக சினிமாவில் உயரிய கௌரவமாக போற்றப்படுகிறது ஆஸ்கர் விருது. இது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் காண்போம்..

* திரைத்துறையில் துறையில் சிறந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வரப்படுகிறது.

* ஆஸ்கர் சிலையின் உயரம் மட்டும்13.5 இன்ச் (34.3 செமீ). இதன் எடை 3.866 கிலோ.

* முதல் முறையாக 1928-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்ஸர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் இந்த அமைப்பில் 36 உறுப்பினர்கள் இருந்த நிலையில் இப்போது கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருக்கின்றனர்.

* மெட்ரோ கோல்டன் மேயர் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கலை இயக்குநர் செட்ரிக் கிபான்ச் ஆஸ்கர் விருதை வரைந்தார். அதுவும், வாள் ஏந்திய பெண் நிற்பது போன்ற வடிவத்தை வரைந்தார். அதற்கு அமெரிக்க சிற்பியான ஜார்ஜ் மேலேண்ட் ஸ்டான்லி தான் முப்பரிமாண வடிவத்தை கொடுத்தார்.

* தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், எழுத்தாளர்கள் தான் ஒரு படம் உருவாவதற்கு காரணம். இந்த 5 முக்கிய தூண்களை சுட்டிக் காட்டும் வகையில், ஆஸ்கர் சிலையில் 5 ஸ்போக்குகள் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

* ஆரம்ப காலகட்டத்தில் ஆஸ்கர் விருதானது வெண்கலத்தால் செய்யப்பட்டு, அதற்கு தங்கமுலாம் பூசப்பட்டிருக்கிறது. நாளடைவில் வெண்கலம், தாமிரம், தகரம், ஆண்டிமனி ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்டு, அதற்கு தங்கமுலாம் பூசப்பட்டது.

* ஆஸ்கார் விருதின் உண்மையான பெயர் அகாடமி அவார்டு ஆஃப் மெரிட். ஆரம்ப காலம் முதலே ஆஸ்கர் விருது சிலை அழைக்கப்பட்ட நிலையில், அதுவே ஆஸ்கர் விருது என்ற பெயராக நிலைத்துவிட்டது.

* ஒவ்வொரு சிலை தயாரிப்பதற்கு மட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் 400 டாலர் வரையில் செலவாகும். இந்த சிலையை அகாடமியின் தயாரிப்பு நிறுவனத்தை தவிர வேறு யாரும் தயாரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

* ஆஸ்கர் விருதை பெறும் பிரபலங்கள் அதனை வேறு யாருக்கும் விற்கவும் கூடாது என்பது அகாடமியின் உத்தரவு ஆகும்.

பொதுவாக, விருது வழங்குதல் என்பது கலைஞனுக்கு கொடுக்கும் மரியாதை, ஊக்கம். அதே நேரத்தில் விருது பெறாத உன்னத கலைஞர்களும் ஒப்பற்ற படைப்புகளும் உண்டு. அவ்வகையில், மக்கள் செல்வாக்கை பெற்ற கலையெல்லாம் ஆஸ்கர் விருதை விடவும், ஆகச் சிறந்த மகோன்னதமே.!

world cinema and oscar award history