‘பிச்சைக்காரன்-3’ படம் பற்றி விஜய் ஆண்டனி அப்டேட்ஸ்
லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மார்கன்’ படம் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், முன்னதாக வெளியாகி ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட ‘பிச்சைக்காரன்’ படத்தின் அடுத்த பாகம் பற்றி விஜய் ஆண்டனி தெரிவிக்கையில்,
‘பிச்சைக்காரன் 3’ கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பிச்சைக்காரன் 3’ வெளியாகும்’ என்றார்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. அதன் 2-ம் பாகத்தினை விஜய் ஆண்டனியே இயக்கி, தயாரித்து, இசையமைத்து நாயகனாகவும் நடித்தார். அப்படமும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘பிச்சைக்காரன் 3’ படத்தினை அவரே தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.