‘காதல் கல்யாணம்’ பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

ஜெகமே தந்திரம், கட்டா குஸ்தி, கேப்டன், பொன்னியின் செல்வன், மாமன், போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ”கட்டா குஸ்தி-2′ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு. மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமியிடம், ‘காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு, ‘காதல் என்றாலே சிக்கல்தான். நாம் வேண்டும் என்று நினைக்கும்போது, தானாக வரும் விஷயம்தான் காதல்’ என பதிலளித்தார். அதன்பின்னர் ‘நீங்கள் எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்?’ கட்டா குஸ்தி படத்தில் வருவது போல அதிரடியாகவா? அல்லது ‘மாமன்’ படத்தில் வருவது போல அடக்க ஒடுக்கமாகவா?’ என்று கேட்கப்பட்டது.
இதற்கு, ‘அது எனக்கு வரும் கணவரின் குணநலன்களை பொறுத்தது. யாராக இருந்தாலும் சரி, வாழ்த்துகளை இப்போதே சொல்லிக்கொள்கிறேன்’ என பதிலளித்தார்.
