முன்னதாக விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழைத்த நிலையில் 649 ரங்களில் டிக்ளேர் செய்தது. கோலி 139 ரன் ( 230 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார்.
சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் உற்சாகமாக விளையாடிய ஜடேஜா சதம் அடித்து அசத்த, அத்துடன் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தார் கோலி. இந்தியா 149.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஷமி வேகத்தில் கேப்டன் பிராத்வெய்ட் (2 ரன்), பாவெல் (1 ரன்) அடுத்தடுத்து வெளியேறியதால் அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.
இதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே ஷாய் ஹோப், ஹெட்மயர் தலா 10 ரன் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த அம்ப்ரிஸ் 12, டோவ்ரிச் 10 ரன் எடுத்து அணிவகுக்க,
வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்துள்ளது. கை வசம் 4 விக்கெட் மட்டுமே எஞ்சியிருக்க, அந்த அணி இன்னும் 555 ரன் பின்தங்கியிருப்பதால், பாலோ ஆன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. சேஸ் 27, பால் 13 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.