டெல்லி : யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் நடைமுறை,  அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளில் , நடைமுறைப்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வி.வி.பி.ஏ.டி என்ற இயந்திரங்களை பயன்படுத்தபடுகிறது. இந்த முறையானது சோதனை மற்றும் செயல்பாடு அடிப்படையில் சட்டமன்ற தேர்தலில்  நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முழு அளவில் வாக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் நடைமுறையை அமல்படுத்த போவதாக  இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்படும் வாக்கு சாவடிகளில் 17 லட்சத்து 30 ஆயிரம் வாக்குபதிவு ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் வழங்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.