VJ Ramya About Her Divorce
VJ Ramya About Her Divorce

திருமணமான பத்தே நாளில் கணவரை பிரிந்தது ஏன் என கூறியுள்ளார் ரம்யா..

VJ Ramya About Her Divorce : தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வருபவர் ரம்யா.

இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அபர்ஜித் ஜெயராமன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த பத்தாவது நாளிலேயே இவர்கள் பிரிந்து விட்டனர்.

ரம்யா நடிக்க வந்து விட்டதே அவர்களின் பிரிவிற்கு காரணம் அதிலும் ஓ காதல் கண்மணி திரைப்படம் தான் முக்கிய காரணம் என பேச்சு கிளம்பியது.

ஹரிஷ் கல்யாணனை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன், ஆனால்? – பிக் பாஸ் ரைசா ஓபன் டாக்.!

ஆனாலும் இத்தனை நாளா விளக்கம் தராமல் இருந்த ரம்யா தற்போது இது குறித்து பேசியுள்ளார். எங்கள் இருவருக்கும் காதல் திருமணம் அல்ல வீட்டில் பார்த்து வைத்த திருமணம் தான்.

திருமணமான அடுத்த சில தினங்களிலேயே எங்கள் இருவருக்கும் செட்டாகாது என தெரிந்து விட்டது ஆகையால் ஒருமனதாக பிரிந்து விட முடிவெடுத்தோம். எனக்கு திருமணம், விவாகரத்து என இரண்டும் நடந்தது 2014 ஆம் ஆண்டு. ஓ காதல் கண்மணி படத்தில் வாய்ப்பு கிடைத்தது 2015 ஆம் ஆண்டு. அப்படி இருக்கும் சமயத்தில் அந்த படத்தால் எப்படி எங்களுக்கு விவாகரத்து நடந்திருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார் ரம்யா.

இருவருக்கும் ஒத்து வரவில்லை அதனால் தான் விவாகரத்து பெற்றுக் கொண்டோம் என கூறியுள்ளார். ரம்யா தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.