யூ டியூப் மூலமாக விஜய் டிவி பிரியங்கா லட்சங்களில் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

VJ Priyanka Revenue From YouTube : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி பிரியங்கா. நிகழ்ச்சிகளை வித்தியாசமான முறையில் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருவதால் இதற்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த, குழு அமைப்பு : தமிழக அரசு

யூ டியூப் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கும் விஜய் டிவி பிரியங்கா - ஒரு மாசத்துக்கு மட்டும் இவ்வளவு கிடைக்குதா??

இதனை உறுதி செய்யும் வகையில் பிரியங்கா தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சிவாங்கி தொகுத்து வழங்குகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

என்னோட அப்பா படம் பார்த்து கண்கலங்கிட்டாரு – Exclusive Interview With Director Deepak Soundararajan

இந்த நிலையில் தற்போது யூடியூபில் பிரியங்கா தனக்கென ஒரு யூடியூப் சேனலுக்கு தொடங்கி வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் மூலம் அவருக்கு ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் இன்னொரு விஜய் டிவி தொகுப்பாளினியான மணிமேகலை தன்னுடைய கணவர் உசைனுடன் இணைந்து யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கும் இந்த வீடியோக்கள் மூலம் நல்ல வருமானம் கிடைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.