டிவி நிகழ்ச்சியில் பிரபலங்கள் குறித்து தொகுபாலினி ஜாக்லின் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக திகழும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் ஜாக்குலின். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்லின் தேன்மொழி B.A என்னும் தொடரில் கதாநாயகியாகும் நடித்திருந்தார். அதன் பிறகு தொகுப்பளனி பணியை நிறுத்திக்கொண்ட ஜாக்குலின் சமீபத்தில் youtube சேனலில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் தொகுப்பாளராக வராமல் இருப்பது ஏன் என்பது பற்றி பரபரப்பான தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர், தொகுபாலினியாக இருக்கும்போது நிகழ்ச்சிக்கு வரும் சில பிரபலங்கள் அத்துமீறி நடந்து கொள்வது, அனுமதி இல்லாமல் தொட்டு பேசுவது போன்றவற்றை செய்வார்கள். அவர்கள் தன்னைப் பெரிய பிரபலமாக நினைத்துக் கொண்டு, செய்யும் செயலை பார்க்கும்போது ஓங்கி கன்னத்தில் அடிக்கத் தோன்றும். எனக்கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.