ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னுடைய கணவரை பிரிய முடிவு எடுத்துள்ளார் அர்ச்சனா.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் ஆர் ஜே ஆகவும் வலம் வந்தவர் அர்ச்சனா. தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டதை தொடங்கி மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்று நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு மாதத்திற்கு முன்னால் தன்னுடைய கணவரை பிரிய முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார். அப்போது தன்னுடைய மகள் சாரா தான் இருவரையும் பேசி சமாதானம் செய்து வைத்ததாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.